ரமண மகரிஷிகள் தாயார் பெயர் அழகம்மாள் . தன் மகன் துறவு பூண்டு திருவண்ணாமலையில் தவம் செய்கிறான், என்று கேள்வி பட்டு தன் உறவுகாரரை கூட்டி கொண்டு அவர் இருந்த பவள குன்று என்ற இடத்திற்கு சென்றார்.
தாய் இளம் துறவியாய் தன் மகன் சடை கொண்டு நகம் வளர்ந்து கொவனமோடு புழுதி படிந்த உடம்போடும் இருப்பதை பார்த்து கதறி அழுதார்.
தன்னோடு மதுரைக்கே வரும் படியும் அங்கே அவர் தவம் செய்ய வசதி செய்து தருவதாகவும் சொன்னார். சுற்றி இருந்த சீடர்கள் தாய் அழுவதை பார்த்து பிரமித்து நின்றனர்.
எவ்வளவு கதறியும் மகரிஷி தன் தாயுடன் வீடு திரும்ப மறுத்து விட்டார். மற்றும் மகரிஷி மௌனமாகவே இருந்தார்.
இதை பார்த்த பக்கத்தில் இருந்த சீடர் ஒருவர் "மகரிஷே , தாய் கதறி அழுவது பார்க்க துக்கம் வருகிறது. ஆதலின் நீங்கள் அவருடன் போகாவிட்டாலும் ஏதாவது சொல்லுங்கள். " என்று வேண்டி கொண்டார்.
கால போக்கில் தன் மகனிடம் வந்து சரணாகதி அடைந்து தாய் அழகம்மாள் தான் இறக்கும் தருவாயில் இறைவனுடன் இரண்டற கலந்து முக்தி பெற்றார்.

அதை உன்னிப்பாக கேட்ட மகரிஷிகள் " படைக்கும் ஈஸ்வரன் அவர் அவர் கர்ம விதிப்படி ஆடி வைக்கிறான். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். எது நடக்க கூடாதோ அது எவ்வளவு முயன்றும் நடக்காது. ஆதலின் நாம் பாரத்தை அவன் மீது போட்டு அமைதியாய் இருப்பதே உசிதம் " என்று உபதேசம் செய்து அருளினார்.
கால போக்கில் தன் மகனிடம் வந்து சரணாகதி அடைந்து தாய் அழகம்மாள் தான் இறக்கும் தருவாயில் இறைவனுடன் இரண்டற கலந்து முக்தி பெற்றார்.

No comments:
Post a Comment