Sunday, September 15, 2013

தாய் அழகம்மாள்

ரமண மகரிஷிகள் தாயார் பெயர் அழகம்மாள் .  தன் மகன் துறவு பூண்டு திருவண்ணாமலையில் தவம் செய்கிறான், என்று கேள்வி பட்டு தன் உறவுகாரரை கூட்டி கொண்டு அவர் இருந்த பவள குன்று என்ற இடத்திற்கு சென்றார்.






தாய் இளம் துறவியாய் தன் மகன் சடை கொண்டு நகம் வளர்ந்து கொவனமோடு புழுதி படிந்த உடம்போடும் இருப்பதை பார்த்து கதறி அழுதார். 

தன்னோடு மதுரைக்கே வரும் படியும் அங்கே அவர் தவம் செய்ய வசதி செய்து தருவதாகவும் சொன்னார்.  சுற்றி இருந்த சீடர்கள் தாய் அழுவதை பார்த்து பிரமித்து நின்றனர். 

எவ்வளவு கதறியும் மகரிஷி தன் தாயுடன் வீடு திரும்ப மறுத்து விட்டார். மற்றும் மகரிஷி மௌனமாகவே இருந்தார்.


 
இதை பார்த்த பக்கத்தில் இருந்த சீடர் ஒருவர் "மகரிஷே , தாய் கதறி அழுவது பார்க்க துக்கம் வருகிறது.  ஆதலின் நீங்கள் அவருடன் போகாவிட்டாலும் ஏதாவது சொல்லுங்கள்.  " என்று வேண்டி கொண்டார்.








அதை உன்னிப்பாக கேட்ட மகரிஷிகள் " படைக்கும் ஈஸ்வரன் அவர் அவர் கர்ம விதிப்படி ஆடி வைக்கிறான். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்.  எது நடக்க கூடாதோ அது எவ்வளவு முயன்றும் நடக்காது.  ஆதலின் நாம் பாரத்தை அவன் மீது போட்டு அமைதியாய் இருப்பதே உசிதம் " என்று உபதேசம் செய்து அருளினார்.







 

கால போக்கில் தன் மகனிடம் வந்து சரணாகதி அடைந்து தாய் அழகம்மாள் தான் இறக்கும் தருவாயில் இறைவனுடன் இரண்டற கலந்து முக்தி பெற்றார்.

Sunday, April 7, 2013

ரமண மஹர்ஷி



ரமண மஹர்ஷியின் ஆன்மீக போதைனைகளை இங்கே நாம் பார்க்கலாம்.

கற்பனை  கதைகள் வாயிலாக அவரின் மணி முத்தான உபதேசங்களை உங்களுக்கு சொல்ல விழைகிறேன். 

தமிழ் நாட்டில் அவ்வளவாக அவர் போதனைகள் எல்லா மக்களுக்கு தெரிந்துருக்க வாய்ப்பில்லை.

தொடருங்கள் இந்த பதிவுகளை. 




உலக வாழ்கையில் பல வித ஆசை கனவுகளுடன் என்றோ ஒரு நாள் நன்றாக தூங்குவதற்கும் சுகமாக AC  வாழ்கை வாழ்வதற்கும் ஆசை படும் ஒரு சராசரி youngster 
ஓடி ஓடி உழைத்து ஒரு  சாதாரண graduate  படிப்பை படிக்கிறான்.

பின் ஒரு உத்தியோகத்தில் சேர்ந்தும் வாழ்கையின் பல அல்லல் பிடியில் சிக்கி தவிக்கிறான்.

ஆசைகள் எதுவும் நிறைவேற வில்லை.  அதே town  bus  அதே கிராமத்து வாழ்க்கையுடன் போராட்டாம்.

மனசில் அழுகை அழுகையாய் வருகிறது.  ச்சே என்ன வாழ்கை -- வய்ற்றிக்கும் வாய்க்கும்  போதாமல் .  தன்  அன்றாட office  வாழ்க்கையில் டவுன் பஸ்சில் மிதி பட்டு வேர்வையில் நனையும் தருவாயில் வீர் என்று முந்தி கொண்டு போகும் toyota  innova  பார்க்க பார்க்க மனம் 
தேம்புகிறது.

அவனால் முடியவில்லை --  சோர்ந்து விட்டான்.

ஒரு நாள் சரி,  இந்த திருவண்ணாமலை போய்  அங்கே ரமணாஸ்ரமம்  சென்று தான் வரலாமே என்று மனதி ஒரு எண்ணம் .

சரி என்று ஒரு sunday  கிளம்பிவிட்டான். 

இடம்:  ரமணாஸ்ரமம்

உள்ளே சென்று மகரிஷிகளின் சமாதியை பார்கிறான்.  
பின் அவர் இருபது வருடம் முழுமையை தங்கி இருந்த old meditation  hall நுழைகிறான்.

வாலிபன்:  இழந்துட்டேன் மகரிஷி.  என் வாழ்க்கையில் எல்லா  கனவுகளும்  அப்டியே தேங்கி இருக்க சுகத்தை அனுபவிக்காமல் கஷ்டம் படுகிறேன் மகரிஷி ,  

மகரிஷி:   வா சரவண  குமார்,  வா, --  






வாலிபன்:  எனக்கு ஒன்னும் புடிக்களே  மகர்ஷி ,  ஒண்ணுமே எனக்கு நன்னா நடக்க வில்லை. எனக்கு ரொம்ப அழுகையும் தூக்கமுமா வருது.  என்ன பாருங்கோ மகரிஷி. நான் எப்டி இருக்கேன் பார்த்தேளா.  சுகம்னா இந்த ஜென்மத்துலே என்னனு தேரிலே.  அதே அழுக்கு துனீ ,  நான் மட்டும் இவ்ளோ கஷ்டம் படறேன்.  என் நண்பர்கள் ,  மற்றும் சொந்த காரா எலாம் நன்னா  city  life ல புரலரா.   foreign போறா .  ACல  தான் மிதக்கரா .

நான் மட்டும் ஏன் இப்டி இவ்ளோ கஷ்டம் வேண்டாம் மகரிஷி வேண்டாம் --  ஒனு  அழறான் சரவணா குமார். 

மகரிஷி:  ஒரு 10 நிமிடம் அவன் தேம்பி தேம்பி அழுவதை மெதுவா கருணை முகத்தோடு பொறுமையாய் வெறித்து பார்த்துக்கொண்டே கேட்கிறார் மகரிஷி. பின் மெதுவாக,  ரொம்பவே மெதுவாக தன்  குரலை ,  அம்ருத தாரை வர்ஷிக்கும் அந்த நாவினால் சொல்ல ஆரம்பிக்கிறார் 
சரவண குமார் -    ஒவ்வொரு வரிலயும்  நான் நான் அப்டின்னு சொல்றியே ,  இந்த நான் யாரு ?  உன் உடம்ப நான் அப்டின்னு சொல்றியா?  இல்ல உன் மனச நான்னு  சொல்றியா?  
எது பா நான்னு அப்டின்னு உன்கிட்டே உதிகர்து?  அந்த நான் அ  எனக்கு  காமியேன் .

அந்த நான்  உணர்வு அதுலயே கொஞ்சம் நாழி இருந்து பாரேன் .
எனக்கு எனக்கு அப்டின்னு  சொல்றே ,  நான் துக்கமா இருக்கேன் அப்டின்னு சொல்றே ,
நான் அப்டிங்கற உள்  உணர்விலேயே கொஞ்சம் நின்னு பாரேன்.  
அது அந்த நான் கருப்பா இல்ல சிகப்பா  ,   இல்ல  என்ன மாதிரி வஸ்து ,  நான் அப்டிங்கறது உன் மூளையா இல்லை மனசா இல்லை கண்ணா இல்ல காதா ,  அந்த நான் எந்த ச்வபாவதுல 
இருக்கு ?






வாலிபன்  :   எனக்கு புரிலே மகரிஷே  ,  நான் என்ற உணர்வுள எப்டி ஒன்றி போய்  இருக்கறது ?  என்னக்கு புரிலே மகரிஷி 


மகரிஷி: எனக்கு புரியல அப்டின்னு சொல்ரியோனோ,  யாருக்கு புரில?  நான் புரிந்துகல  அப்டின்னு சொல்றச்ச ,  நான் அப்டின்னு எதையோ ஒன்ன   குறிபிடரையே ,  அந்த நான் அப்டிங்கற உணர்வ இறுக்கமா  புடிச்சுக்கோ.  

உதாரணமா ,  உனக்கு நன்னா வேர்கறது,  அப்போ உடம்புல ஒரு heat ,  sweating ,  இப்போ 
இந்த sweating  அப்டிங்கற feeling , அதை நன்னா உணர பாரு.     அப்போ உன்னோட நான் அப்டிங்கற உணர்ச்சி,  sweating  அப்டிங்கற feeling ல நன்னா  தெரியும் .  உள்  உணர்வா நீ எத பண்ணினாலும்,  நீ எத அனுபவிச்சாலும்,  உள்  உணர்வா நான் தான் அனுபவிக்கறேன்  அப்டின்னு ஒரு experience  இருக்கு இல்லியா ? அந்த underlying  experiencea நன்னா feel  பண்ணு.  .

வாலிபன்  :  ஹே மகரிஷே உங்க சந்நிதியில் எனக்கு நிம்மதி கிடைசுர்க்கு .  ஆசை மேல அலைந்து அலைந்து போன மனம் அமைதியா இருக்கு.  இனி நான் என்ன செய்ய வேண்டும் மகரிஷே.  ?

 மகரிஷி: நிறைய செயல்கள இத பண்ணனும் அத பண்ணனும் என்று plan  பண்ணி செய்ததெல்லாம் போதும்.  அருணாச்சலா மலை மீது உன் பாரத்தை போட்டு அமைதியாய் இரு.  நடத்தி வைப்பவன் அவனே உன்னை காரியம் செய்ய வைக்கிறான்.  அமைதி ஆடை.  ஓம் தத் ஸத்